நாமக்கலில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாதது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராமல் சாலையிலேயே இறக்கிவிடும் நிலையில், 200-க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் பாதித்துள்ளதாக வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.