ஏழைக் குழந்தைகளின் ஊட்டச் சத்தையும், வளர்ச்சியையும் கேள்விக் குறியாக்கி, 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், வெற்று விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் அறிவாலய அரசு, ஊழியர்களின் பற்றாக்குறையை சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களை மூட ஆயத்தமாகி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.