சென்னை காசிமேட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து இறால் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு பகுதியில் மலை போல் குவிந்துள்ள இறால் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இறால் கழிவுகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.