சமூகத்தில் குழந்தைகளுக்கு நேரிடும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டி நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், பாவை பவுண்டேஷன் பெண் குழந்தைகள் இல்லம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் மாணவர்கள் கலந்து கொண்டு குறும்படங்களை திரையிட்டனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகள் கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் குறும்படங்களை தயாரித்திருந்தனர்.