வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வக்ஃபு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், வியாபாரிகள் இணைந்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் நகரில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை.