தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டதன் பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி வெளியானது. குமந்தாபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார், கடையநல்லூரில் இருந்து குமந்தாபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜபாளையத்தில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த சசிக்குமார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி... ஆய்வு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார்