கோவை சூப்பர் பாஸ்ட் ரயிலில் வாங்கிய கோபி 65 உணவில் புழு இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கோவை சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணி ஒருவர் தன் குழந்தைகளுக்காக காலிஃபிளவர் 65 ஆர்டர் செய்துள்ளார். ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் உணவு விற்பனை செய்யப்படும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அந்த உணவில் புழு இருந்ததால் உணவு விற்பனையாளர்களிடம் பயணிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும், not for retail sale என்பதை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் விலைக்கு உணவு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினர்.