வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கடையில் வாங்கி வந்த கோழி வறுவலில் புழுக்களும் சேர்த்து பொரிக்கப்பட்டிருந்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். காட்பாடியை அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள RM கோழி மற்றும் மீன் வறுவல் கடையில், அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சனா என்ற செவிலியர் தனது குழந்தைகளுக்கு சிக்கன் 65 வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்த போது கோழி வறுவலில், புழுக்களும் சேர்த்து பொரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.