திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் மின் கட்டணம் 11 லட்சத்தை தாண்டி வந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தார். பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 923 யூனிட் பயன்படுத்தியுள்ளதாகவும் 11 லட்சத்து 95 ஆயிரத்து 631 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.