நெல்லையில் திருடர்களை போல இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிந்து பூந்துறை பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர், பைனான்ஸ் நிறுவனத்துக்கு மாத தவணையை சரியாக கட்டாடதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அந்நிறுவன ஊழியர்கள் திருடர்களை போல வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.