திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் டீக்கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அக்ரஹார பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், நிலக்கோட்டையில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது டீக்கடை ஒன்றில் சூடாக வடை போடுவதை பார்த்து குடும்பத்தினருக்கு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அனைவருக்கும் வடையை கொடுத்து விட்டு தாமும் சாப்பிட முயன்ற போது, பருப்பு வடைக்குள் பூரான் இருந்துள்ளது.