ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கிறிஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.