சென்னையை அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கினர். ரயில்வே ஊழியர்கள் என்ஜினை ஆய்வு செய்த போது மின்சார உராய்வு காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து என்ஜின் சீரமைக்கப்பட்டு அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு,குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.