தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் விடிய விடிய தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. சுமார் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கழிவறையில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருக்கும் வீடியோ வெளியானது. இந்நிலையில், உடனடியாக சோதனை மேற்கொண்ட அரசு அதிகாரிகள், இரவு முழுவதும் பள்ளியில் முகாமிட்டு, பணியாளர்களை வரவழைத்து தடுப்புச் சுவர் கட்டும் பணியை மேற்கொண்டனர்.இந்த நிலையில், ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், இளநிலை பொறியாளர் ரமேஷ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.