மகா சிவராத்திரியை முன்னிட்டு, கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நடைபெற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவிலில் செல்லாண்டியம்மன், கருப்பண்ணசாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழச்சி குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.