புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரல் மழையையும் பொருட்படுத்தாது கிரிவலம் வந்தனர். கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலுருந்தும், அண்டை மாநிலங்களிலுருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலத்தின் போது திருவண்ணாமலையில் மிதமான சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் குடை பிடித்துக் கொண்டு கிரிவலம் சென்றனர்.உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 14 கிமீ மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவது வழக்கம்.புரட்டாசி மாதத்தில், குறிப்பாக திங்கட்கிழமையில் கிரிவலம் வரும்போது, புண்ணிய கணக்குகள் மேலோங்கும் என ஆன்மீக பக்தர்களால் சொல்லப்படுகிறது.புரட்டாசி மாத பௌர்ணமி நேற்று இரவு 11.43 மணிக்கு தொடங்கி இன்று காலை 09.50 மணி வரை இருந்தது. சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.