திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிஸ்கட் கொடுத்து நூதன முறையில் ஆடுகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். மும்முனி கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசிய சுல்தான் என்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே 2 ஆடுகளை பிஸ்கட் கொடுத்து காரில் திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுல்தானிடம் இருந்து 13 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.இதையும் படியுங்கள் : புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி விழா... ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு