கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கூசனப்பள்ளி கிராமத்தில் வீட்டிற்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தேடிவருகின்றனர். ராஜூ என்பவரின் வீட்டின் பின்புறமாக பதுக்கி வைத்திருந்த 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.