விசுவாசம், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேபாள நாட்டை சேர்ந்த ஷர்மிளா தாப்பா,நடன உதவி இயக்குநர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்துள்ளார். இவர், சென்னை அண்ணா நகர் முகவரியில் இந்தியவிற்கான பாஸ்போர்ட் வைத்திருந்திருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது பாஸ்போர்ட் காலாவதியானதையடுத்து, வியாசார்பாடி முகவரியை கொடுத்து பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்ததாக தெரிகிறது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி, நடிகை தாப்பா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவகலம் தரப்பில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.