திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழாவின் 8வது நாளையொட்டி சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தொடர்ந்து 12 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்த சாமியை பலரும் வழிபாடு செய்தனர்.இதையும் படியுங்கள் : பழனி முருகன் கோயிலில் ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை 627 கிராம் தங்கம், 18,080 கிராம் வெள்ளி கிடைத்தது