பெரம்பலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்கள் இரண்டு பேர் அங்குள்ள மைதானத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது அங்கு பைக்கில் வந்த கிருஷ்ணகுமார், இலவசமாக டியூசன் நடத்துகிறேன் என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மாணவர்கள் அலறியுள்ளனர்.சத்தம் கேட்டு உள்ளே சென்ற பொதுமக்கள், கிருஷ்ணகுமாரை தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.