புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 44 வயதான நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொசவப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற அந்த நபர், பெயிண்டிங் வேலைக்கு சென்றபோது, அங்கிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.