திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முசுவனூத்தைச் சேர்ந்த அழகர்சாமி, 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.