திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வல்லரசு என்பவர் தனது அக்கா வீட்டுக்கு சென்ற நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், இளைஞரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் சிறையில் அடைத்தனர்.