மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரியும் மூர்த்தி, அங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.