விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்யக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வானூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான திருவக்கரையை சேர்ந்த பாஸ்கர், தன்னை அடிக்கடி மிரட்டி உல்லாசத்துக்கு அழைப்பதாக திருமணமான பெண் ஒருவர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வானூர் எம்.எல்.ஏ சக்கரபாணி தலைமையில் அதிமுகவினர் திமுக நிர்வாகியின் புகைப்படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.