மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமாளை, கட்சி கொடி கட்டிய காரில் போலீசார் அழைத்து சென்றதாக புகார் எழுந்தது. செய்தியாளர்களை பார்த்தவுடன் காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு, தற்போது காவல்துறையின் செயல்பாடுகளால் சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது. குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டிய சட்டத்தின் காவலர்கள், கைப்பாவையாகச் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது சிவசேனா பிரமுகர்... இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசேனா பிரமுகர் தாமோதர பெருமாளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த விதம், பொது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு குற்றவாளியை அழைத்து வர காவல் துறையிடம் அரசு வாகனங்கள் இல்லையா? அல்லது குற்றவாளிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்ட இது திட்டமிட்ட நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடி பறக்குது... திமுக கொடி கட்டிய காரில் ஒரு கொடூரனை விசாரணைக்கு அழைத்து வந்தது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், பொது மக்களுக்கும் காவல்துறை சொல்ல வரும் செய்தி என்ன? சட்டத்தின் மாண்பை விட, அரசியல் கட்சியின் கொடி தான் உயர்வானதா? என்ற ஆவேசமான கேள்விகள் எழுந்துள்ளன. காவல் துறையினர் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் வாகனங்களை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்? இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்ய ஏதேனும் திரைமறைவு வேலை நடக்கிறதா? என்ற சந்தேகம் வெடித்துள்ளது வைரல் ஆகும் காட்சிகள் காவல் துறையினரின் இந்தச் செயல்பாடுகள் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகின்றன. ஒரு பிஞ்சுவை சிதைத்த கொடூரனை அரசு வாகனத்தில் அழைத்து வராமல், ஒரு கட்சியின் அடையாளத்தோடு பவனி வருவது யாருக்கான பாதுகாப்பு? என காண்போர் கொந்தளித்துள்ளனர். Related Link நகைக்காக மூதாட்டி கொ* - தாய், மகள் கைது