திருச்சி திருவெறும்பூர் அருகே பாலியல் தொழில் நடத்திய வந்த மசாஜ் சென்டருக்கு திருவெறும்பூர் தாசில்தார் முன்னிலையில் போலீசார் சீல் வைத்தனர். காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப் படை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். 6 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக கட்டிட உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.