திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து கழிவுநீர் வாகன ஓட்டுநர் இறந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற நகராட்சி ஒப்பந்த ஊழியரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலவடம் போக்கி தெருவில் கழிவுநீர் வெளியேற்றும் பணியின் போது கழன்று விழுந்த பைப்பினை எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர்.