மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சாக்கடையிலிருந்து வெளியேறிய கழிவுநீர் அரசு நடுநிலை பள்ளி வளாகத்துக்குள் புகுந்ததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். கிருதுமால் நதியை கடப்பதற்காக கட்டப்பட்டு வரும் பாலப் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்ததால் வேறு வழியின்றி பள்ளிக்கு வந்த மாணவர்கள் கோயில் அருகே சாலையில் அமரவைக்கப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கழிவுநீரானது பள்ளிக்குள் புகுந்த நிலையில் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபர்கள் கைது... இரண்டு பேரை கைது செய்த போலீசார்