குமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுவெளியில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தினசரி அதிக மக்கள் குவியும் இந்த சுற்றுலா தலத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.