தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு அருகே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.