ஈரோடு மாநகராட்சியில் கழிவு நீர் கால்வாயில் தூர்வாரும் பணி துவங்கியது. கடந்த மூன்று மாதங்களாக தூர் வாராமல் இருந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.