விவசாய தோட்டத்தில், 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சந்திரப்பிள்ளை வளசு ஊராட்சிக்கு உட்பட்ட அரசன் குட்டை பகுதியில், கௌரி என்பவர் விவசாய தோட்டத்தில், மக்காச்சோளம் பயிரிட்ட காட்டில் ஏதோ சத்தம் கேட்பதாக, எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, பெரிய பாம்பு இருந்தது. உடனடியாக கௌரி, அருகில் உள்ளவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். பொது மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மக்காசோள காட்டில் பார்த்த போது, 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வாழப்பாடி தீ அணைப்பு துறையினர், மலைப் பாம்பை பிடித்து, வாழப்பாடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால், கிராம பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.