அன்னிய செலவாணி முறைகேட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த சொகுசு விடுதியின் 60 அறைகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு இயங்கி வந்த 2 வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடம் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான செவன் ஹில்ஸ் விடுதியின் அறைகள் மற்றும் நிலம் என 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கையகப்படுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.