தோஸ்த் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி மதுபாட்டில்களை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான மரக்காணத்தைச் சேர்ந்த ஐயப்பனை கைது செய்ததோடு, தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மதுபாட்டில்களை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.