2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து களப்பணியை தொடங்க வேண்டும் என கட்சியினருக்கு திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய கனிமொழி எம்பி, பொதுக்குழுவில் முதலமைச்சர் கூறிய அறிவுரைப்படி, கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.