சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராகவும்,இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பொன்னுசாமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லேசான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினம் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பு என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.