அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று, செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நெல்லையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. அவர்களது சொந்த குரலில்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களது கருத்தை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்ள வேண்டும்.அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து இபிஎஸ் தான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என கூறிக் கொண்டிருக்கிறேன்.அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நிச்சயமாக நல்லது நடக்கும். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார். இதையும் கேளுங்கள்: அதிமுக உட்கட்சியில் வெடித்த பிரளயம் - நயினார் பரபரப்பு கருத்து | NainarNagendran | AIADMK | Kas