அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து விட்டு பேசியது இருவருக்குமான மோதல் தொடர்வதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஈரோடு சத்தியமங்கலம் அருகே கொமராபாளையத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.