அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி அடைய ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறி இருப்பதாவது:செங்கோட்டையனின் எண்ணம், செயல் வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லி வருகிறேன். இதன் முன்முயற்சியை செங்கோட்டையன் எடுத்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.குடியரசு துணை தலைவராக பதவி ஏற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் கண்ணியமானவர். அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடிய பெருந்தகை. அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அவருடைய பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே வாழ்த்து தெரிவித்து விட்டேன். நயினார் நாகேந்திரனிடம் எனது போன் எண் உள்ளது; அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும்.இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளார். இதையும் கேளுங்கள்; பரபரப்பான சூழலில் OPS திடீர் பிரஸ் மீட் | O Panneerselvam | KA Sengottaiyan | ADMK News