கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் நடைபெற்ற தென்னை சாகுபடி விவசாயிகள் கருத்தரங்கில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பல்வேறு நோய் தாக்குதல்களால் தென்னை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், கருத்தரங்கில் அந்த பாதிப்புகளை தடுப்பது குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என புகார் கூறினர்.