திருச்சி மாவட்டம் எடமலைபட்டிபுதூரில் உள்ள உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை செய்த வழக்கில் உணவக உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.எடமலைபட்டிபுத்தூரில் உள்ள உணவகத்தில் சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட நிலையில், சத்துணவு முட்டை இருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து, உணவகத்தின் உரிமையாளர் ஜெர்னத்துல்குபுரா மற்றும் அவரது சகோதரியிடம் விசாரித்ததில் ரகுராமன் மற்றும் சத்யா ஆகியோர் முட்டை விநியோகித்தது தெரிய வந்தது.இதனைதொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.