சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பூஞ்சை பிடித்த கேக் விற்பனை செய்த பேக்கரிக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பூண்டி தங்கமாள் தெருவைச் சேர்ந்த கோபி, லட்சுமி கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பேக்கரியில் வாங்கிய கேக்கில் பூஞ்சை பிடித்து துர்நாற்றம் வீசிய செய்திகள் வைரலான நிலையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, 20 கிலோ கெட்டுப்போன கேக்குகளை பறிமுதல் செய்து அழித்தனர்.