கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக பத்து பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 510 மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கரும்புக்கடை பகுதியில் முஜிபுர் ரஹ்மான் என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் கொடுத்த தகவலின் பேரில், மற்ற 9 பேரும் சிக்கினர்.