வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே போதை ஊசி மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மேலும் ஒருவனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்டப்பாறை மலையடிவாரத்தில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை பயன்படுத்தியும், விற்பனையும் செய்து வந்த 5 பேரை குடியாத்தம் கிராமிய போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பள்ளிகொண்டா கீழாச்சூர் பகுதியை சேர்ந்த சரண் என்கிற ஜார்ஜ் என்பவனிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து பயன்படுத்தியும், விற்பனையும் செய்து வந்ததாக தெரிவித்தனர். அதன்பேரில் ஜார்ஜை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.