ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தையை விற்ற 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த நித்யா, கருத்து வேறுபாடு காரணமாக தமது கணவரை பிரிந்து சந்தோஷ் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய திட்டமிட்டு, பானு என்பவர் உதவியுடன் நாகர்கோவிலுக்கு சென்றதுடன், புரோக்கர் செல்வி என்பவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு 4 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினர். இந்நிலையில் குழந்தையின் நினைவாக இருந்த தாய் நித்யா கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்படி சந்தோஷ்குமார், இடைத்தரகர்கள் செல்வி, பானு, ராதாமணி, ரேவதி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.