பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஊட்டியில் 2500 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஐ லவ் ஊட்டி என்ற செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத்திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.