திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவின் கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 724-வது வருட பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 14 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா, கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்ற நிலையில், புனித கொடி இறக்கம் நேற்று இரவு வாண வேடிக்கைகளுடன் விமரிசையாக நடைபெற்றது.