ஆந்திராவிலிருந்து இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை வேலூர் குடியாத்தம் போலீசார் பறிமுதல் செய்தனர். சைனாகுண்டா சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்தபோது தட்டாங்குட்டையை சேர்ந்த மஞ்சுநாத் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது.